search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள் புகார்"

    மாமல்லபுரம் கடற்கரையில் விதிமுறையை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு மணல் பரப்பு அழிக்கப்பட்டு வருவதால் பேரூராட்சி செயல் அலுவலர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மீனவர்களின் வீடுகள் மட்டுமே இருந்தன. தற்போது அப்பகுதியில் விடுதி, உணவகம், பார், சர்பிங், யோகா, சூரிய குளியல் என உல்லாச பகுதியாக மாறியுள்ளது.

    கடற்கரை ஒழுங்காற்று மேலான்மை விதிகளின்படி கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவிற்குள் கட்டிடம் கட்ட தடை இருந்தும் தற்போது கடற்கரையை ஒட்டிய மணல்வெளியில் ஓய்வு காட்டன், கார்பார்க், சீ பாஸ்ட்புட், சீகுடில் என விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும் மணல் பரப்பு சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலை தொடரும் பட்சத்தில் மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை நாளடைவில் குறைந்து சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவாய் குறையும் வாய்ப்பு உள்ளது.

    இதனை மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×